இந்திய அளவில், சிறப்பான முறையில் பள்ளிக் கல்வி வழங்கும் செயல்பாட்டில், லட்சத்தீவுகள் முதலிடம் பெறுகிறது.பல்வேறு அம்சங்களைக் கொண்ட
கல்வி மேம்பாட்டு குறியீடு 2012-13ன்படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அணுகுதல், ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் பயன்விளைவு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனியாக ரேங்க் வழங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட குறியீடு, மத்திய மனிதவள அமைச்சகம் மற்றும் கல்வி திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டது.லட்சத் தீவுகளுக்கு அடுத்து, புதுச்சேரி இரண்டாமிடமும், தமிழகம் மூன்றாமிடமும் பெற்றுள்ளன. அதற்கடுத்த நிலைகளில், வடகிழக்கு மாநிலங்கள் வருகின்றன. இப்பட்டியலில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.வட இந்தியாவைப் பொறுத்தவரை, பஞ்சாப் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி மாநிலம் 11வது இடத்தைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி