கவுன்சிலிங்கை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2013

கவுன்சிலிங்கை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்.


தலைமை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்து, முறைப்படி நடத்த வேண்டும்,' என பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு இடமாறுதலாகவும்,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வாகவும் நேற்று கவுன்சிலிங் நடந்தது.அவசரமாக நடந்த இக்கவுன்சிலிங் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: ஆசிரியர் கவுன்சிலிங்கை முறைப்படி முன்னுரிமை பட்டியல் வெளியிட்டு, 15 நாட்கள் கழித்து நடத்த வேண்டும். ஆனால் முன்தினம் இரவு 7 மணிக்கு இமெயில் மூலம்கூட தெரிவிக்காமல், சம்பந்தப்பட்டோருக்கு மட்டும் "திடீரென' அறிவித்து கவுன்சிலிங் நடத்தி இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அவசரமாக நடத்துவதற்கான பின்னணி என்ன?248 பேருக்கு பதவி உயர்வு மூலம் வழங்குவதாக அறிவித்தும் மாலை 5 மணி வரை யாருக்கும் வழங்கவில்லை. கல்வித்துறையில் இதுபோல ஒருபோதும் நடந்ததில்லை. முறைகேடான இக்கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும், என்றார்.

1 comment:

  1. high school h m promotion is a cheating .bt senior teachers who were waiting for one year are all cheated by the education department.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி