கூடுதல் பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு ஆசிரியர் மன்றம் தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

கூடுதல் பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு ஆசிரியர் மன்றம் தீர்மானம்.


கூடுதல் பட்டம் பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழக இடை நிலை மற்றும் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர் மன்ற மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட கூட்டம்


கிருஷ்ணகிரியில் தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முனிராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுரேஷ்பாபு வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் துரைபூங்கா வனம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சண்முகம், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர்கள் சிவப்பா, ரகு, கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகர், சதானந்தம், தளி ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார், ஓசூர் கல்வி மாவட்ட தலைவர் நாகராஜ், ஓசூர் கல்வி மாவட்ட துணைத் தலைவர் மாதேஸ்வரன், வேப்பனப்பள்ளி வட்டத் தலைவர் கிருஷ்ணன், ஓசூர் கல்வி மாவட்ட மகளிர் அணி தலைவி சாந்தி ஆகியோர் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில்,
*10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு முழுமனதாக பாடுபடுவது.
*இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பதவி உயர்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் வழங்க கோருவது.
*பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தகுதியுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதே பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
*இரட்டை பட்டம் அல்லது கூடுதல் பட்டம் பெற்றுள்ள இடை நிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்
என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

1 comment:

  1. neenga theermanam potta government ok solliduma? neverrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி