முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு- டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு- டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர்எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில்,
மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,"முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம்நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார்.அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "இதற்கு,ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்தவேண்டும்' என்றார்.இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:"பி'வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது.

இதில், பிழையானவினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. "பி'வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார்.

நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணை மதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

18 comments:

  1. Ithu aniyayam.B series ku kuraintha patcham 2 or 3 grace marks koduthirukalam.oru 5 ques.suthamaga puriyamal etho ondrai shade seithu vantha avalam B series ku mattum.candiatates( tet pg)Trb in meethu case poduvathu thavaru enbathu intha visayathil poi aki ullathu.intha mathiri ellam indiavil than nadakum.vetkama irukkuya.

    ReplyDelete
  2. After a long painful awaiting of all PG TAMIL candidates, all problems came to sweet end by dec 11th on Mahakavi Bharathiyar's birthday.

    Happy to hear the judgement about the release of pg tamil result by honourable madurai hc bench.

    Thanks to TN govt & TRB for higher appeal against re exam judgement by considering the true hardwork of all series candidates & finishing the pg tamil issue before publishing other pg subject final selection list.

    (Pg tamil candidates dont feel about the judgement. TRB wil always do the best and right decision in all circumstances. They never make problem to the candidates. News came that qn with more error-manavayathu/kaalavayathu & some unknown qns upto 3 or 4 get star for all series. Full details wil b soon received after the publication of today's judgement copy)

    ReplyDelete
    Replies
    1. Hi sir pl tell the site to download this full judgement.... It ll be very helpful to all pg tamil candidates. Pl sir.........

      Delete
  3. sir all series ku star symbol koduthu ques. neeki tta B series ku eppadi niyayamaga irukum.ondrum purinthu kolla mudiyatha 3 ques ku 3marks kodupathuthan niyathi.appadi ellam trb seiyya povathillai enpathu matum unmai.

    ReplyDelete
    Replies
    1. what you were doing in the exam hall? If 3 questions are unclear due to printing mistakes during exam, any candidate having common sense could easily check that with hall supervisor and get clarified. Even elementary class students used to do that. Did you people give it a try? Now shouting and screaming for grace marks like a school boy.

      Delete
  4. Revalution commerce histroy ku panuvangala

    ReplyDelete
    Replies
    1. sir did you get any news about commerce and history

      Delete
  5. 19th century question for common all the subject revalute forall subjecta or case filled subject matuma

    ReplyDelete
  6. Replies
    1. wow nice TAMIZH name

      Delete
    2. So wat? This's not a dating site Romeo..

      Delete
    3. hello iam not romeo iam juliet. paraturadha rasika mudialanalum ipdi discourage panadhinga sister

      Delete
  7. good breath nila. i like ur name.

    ReplyDelete
  8. tamil pg result eppa viduvanga terindal sollunga.

    ReplyDelete
  9. mr.Comment 1.08 am.sir neenga tamil B series ah.nichayama irukathu.hall supervisor kita ketkama irupankala.avar enna sonnar na ungalaku enna theriumo eluthunga appdinu.entha centre la mistake ques. correction panni koduthanga?last 1hour la yavathu trb corectionku arrange pannirukalam.hard work panni padichavan than patharuvan.now i got just 99.ellam ennoda bad luck.

    ReplyDelete
    Replies
    1. Which quota are you belongs to sir?

      Delete
  10.  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கு டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண் மற்றும் முதல் 10 இடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவ்விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஒவ்வொரு உயர்ந்தபட்ச மதிப்பெண்    A-112B-121C-115D-116.முதல் 10 இடங்களில் தேர்வர்கள் எண்ணிக்கைA-0B-6C-2D-2..                                             மேலும் இம்மதிப்பெண்கள்  இறுதிசெய்யப்பட்ட கீ ஆன்சர்படி பெற்றமதிப்பெண்களாகும்.இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது 115 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் 10 ஆக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
    Source tamilthamarai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி