பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பாதுகாவலர் திட்டம் முடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2013

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பாதுகாவலர் திட்டம் முடக்கம்.


பள்ளிகள் திறந்து ஆறு மாதங்காகியும், பாதுகாவலர் நியமிக்கப்படாததால், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பாதுகாவலர் நியமிக்கும் திட்டம் முடங்கியுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவசகல்வி அளிக்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் 56 ஆயிரம் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை, பள்ளியில் சேர்ப்பதற்காக எஸ்.எஸ்.ஏ., மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு புதிதாக 54 துவக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலும் பேருந்து வசதி இல்லாத மலை, காடு பகுதிகளில் வசிக்கும் பள்ளி செல்லா குழந்தைகளை, பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பாதுகாவலர் நியமிக்கும் திட்டத்தை அரசு அறிவித்ததது.முதல் கட்டமாக திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 151 குடியிருப்புகளை சேர்ந்த 3,750 குழந்தைகளுக்கு, செயல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதில் பாதுகாவலர்களை நியமிக்க, ஒரு குழந்தைக்கு ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.1.12 கோடியை அரசு ஒதுக்கியது. ஆனால், பள்ளிகள் திறந்து 6 மாதங்களாகியும், பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி