கண் இமைத்தால் எரியும் மின் சாதனங்கள்: கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

கண் இமைத்தால் எரியும் மின் சாதனங்கள்: கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை.


்கண் இமைப்பின் மூலம் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் பல்பு, டிவி, பிரிட்ஜ், பேன்களை இயங்க செய்யும் புதிய மின் "சர்க்யூட்"டை கண்டுபிடித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.இதை கண்டு பிடித்த மின்னியல், மின்னணுவியல் துறை
இறுதியாண்டு பி.டெக் மாணவர்களான ராம்பிராஷாந்த், சபரீஷ், சஞ்சய் காந்தி கூறியதாவது: "கண்களின் இமைப்பதன் மூலம் கம்ப்யூட்டரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதை "வெப் கேமரா"வில் பதிவு செய்து அதன் மூலம் வீட்டிலுள்ள மின்சார பல்பு, டிவி, பிரிட்ஜ், பேன்களை ஆப், ஆன் செய்ய முடியும்.வலது கண் இமைப்பை வலது புற "மவுஸ்" பட்டனாகவும், இடது கண் இமைப்பை இடது புற"மவுஸ்" பட்டனாகவும், இரண்டு கண்களையும் இரண்டு முறை இமைத்தால், "டபிள் கிளிக்"காவும் பயன்படுத்தி கம்ப்யூட்டரில் "விஸ்வல் பேசிக்" மூலமாக, இந்த ஆணை புதிய மின்சார சர்க்யூட்டிற்கு செல்லும் இதில் எவ்வித "சென்சாரு"ம் பயன்படுத்தவில்லை.

பின்பு சர்க்யூட்டிலிருந்து "ரிலே" மூலமாக மின்சார உபகரணங்கள் பல்பு, பேன், பிரிட்ஜ் இவற்றை ஆன், ஆப் செய்யலாம்.கண் இமைப்பு "கிரேடிபிரிடிக்சன் அல்காரிதம்" விதிமுறைப்படி இயக்கப்படுகிறது. இது மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலேயே மின்சார உபகரணங்களை இயக்க வைக்க முடியும். இந்த புராஜக்ட், தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகத்திற்கு காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, என்றனர்.மாணவர்களையும், உதவி புரிந்த துறை தலைவர் கண்ணன், பேராசிரியர் ராம்குமாரை , பல்கலை தலைவர் கலசலிங்கம், வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் சரவணசங்கர், பதிவாளர் வாசுதேவன், துணை பதிவாளர் குருசாமி பாண்டியன் பாராட்டினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி