புகார்! சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மீது ஆசிரியர்கள் "வசூல்' குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2013

புகார்! சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மீது ஆசிரியர்கள் "வசூல்' குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க தீர்மானம்.


மதுரை மாவட்ட சார்நிலை கருவூலங்களில் பணப் பலன்கள் பெறும்போது, அலுவலர்கள் சிலர் கட்டாய "கமிஷன்' வசூல் செய்வதாக ஆசிரியர்கள் புகார் கூறியுள்ளனர்.மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி பேரையூர்
உட்பட தாலுகாக்களில் சார்நிலை கருவூலங்கள் உள்ளன. அந்தந்த பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் உட்பட பல்வேறு பணப் பலன்களுக்கு, இந்த அலுவலகங்களை தான் அணுகவேண்டியுள்ளது.மேலும், சேமநல நிதியில் கடன் பெறுவது, ஈட்டிய விடுப்பு சம்பளம் பெறுவது, அகவிலைப்படி நிலுவைத் தொகை பெறுவது மற்றும்ஓய்வூதியப் பலன்களை பெறவும் இந்த அலுவலகங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டும்.அவ்வாறு செல்லும்போது பல அலுவலகங்களில், மொத்த பணத்தின் விகிதாசாரம் அடிப்படையில் ஒரு சதவிகிதம்"கமிஷன்' கட்டாயமாக வசூலிக்கின்றனர் என்பது ஆசிரியர்கள் புகார்.இதைக் கண்டித்தும், கலெக்டரிடம் புகார் அளிக்கவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அச்சங்கத் தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறியதாவது:

பணப் பலன் தொடர்பாக, பல்வேறு பணிகளுக்கு சார்நிலை கருவூலங்களை ஆசிரியர்கள் அணுகவேண்டியுள்ளது. மொத்த பணத்தில் விகிதாசாரம் அடிப்படையில் கட்டாய கமிஷன் வசூலிப்பதாக, எங்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.மேலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பல மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க முடிவு செய்து,பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, என்றனர்.மாவட்ட கருவூல அலுவலர் முரளிதரன் கூறுகையில், ""கட்டாய வசூல் பிரச்னை தொடர்பாக இதுவரை எனக்கு எவ்வித புகார்களும் வரவில்லை. ஆசிரியர்கள் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது குறித்து தகவல் இல்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விருப்பமில்லை,'' என்றார்.

2 comments:

  1. thanjavur district. THIRUVIDAIMARUDUR TREASURYUM THAN.

    ReplyDelete
  2. Tamilnadu la irukara ella treasury layum than..highly irritating..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி