தற்செயல் விடுப்பு விதிகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2013

தற்செயல் விடுப்பு விதிகள்...


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது ,
இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. மத விடுப்புடன் சேர்த்து தற்செயல்விடுப்பு எடுக்கலாம்.

5. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

6. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

7. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)

8. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

9. அவசர காரணங்களுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83

நன்றி-(TESTF பெருந்துறை)

4 comments:

  1. sir, now i am in probation period i hv take L.P for 4 days with M.C any changes in completion of probation period. i am the senior in my block appointent 6 teachers in same day.i hv selected in TRB-TET

    ReplyDelete
  2. yes, probation period thallipokum.

    ReplyDelete
  3. வணக்கம்.. ஒன்பது மாதங்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து பள்ளியில் சேர்ந்தவர் பிறகு எத்தனை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி உண்டு..??

    ReplyDelete
  4. வணக்கம்.. ஒன்பது மாதங்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து பள்ளியில் சேர்ந்தவர் பிறகு எத்தனை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி உண்டு..??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி