உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2013

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பு.


உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பது என்ற முடிவை சி.பி.எஸ்.இ. மேற்கொண்டுள்ளது.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறியதாவது:
கல்வி உரிமை சட்டத்தின் பரிந்துரைப்படி, ஒரு பள்ளி, ஒரு வாரத்திற்கு 45 மணி நேரங்கள் செயல்பட வேண்டும். இதன்படி, வாரத்திற்கு 6 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 6 மணிநேரம் 10 நிமிடங்கள் செயல்பட வேண்டியுள்ளது.பள்ளி வேலைநேரம் முடிந்த பிறகும், ஒரு ஆசிரியரை கூடுதலாக 1.20 மணிநேரம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் திட்டமிடுதல், தயாராதல், சரிபார்த்தல்ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.அதேசமயம், ஒரு ஆண்டிற்கு 1200 மணிநேரங்களுக்கும் மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தேவையான கூடுதல் ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு 6 நாட்கள் பணி என்ற இந்த திட்டத்தில், சாதக மற்றும் பாதக அம்சங்கள் கலந்தே உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி