அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம்செய்ய கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2013

அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம்செய்ய கூடாது.


அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் கமிஷனின் அடிப்படையில் குறைக்கப்பட்ட ஊதியத்தை,டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவூலங்களுக்கு நிதித்துறை திடீர் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 6வது ஊதியக் குழு
பரிந்துரைகள் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊதியத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டின.இதைத்தொடர்ந்து, ஊதியக்குழு முரண்பாடுகளை களைய தமிழக அரசு மூன்று நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய் துறை, போலீஸ் துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 22 துறைகளைச் சேர்ந்த 52 பதவிகளுக்கான அடிப்படை ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழகநிதித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சார்பில்சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, ஏற்கனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை திடீரென குறைக்கக் கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டது.ஐகோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை ஜன.6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே, அடிப்படை ஊதியம் குறைத்து உத்தரவிடப்பட்ட ஊழியர்களுக்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது.ஏற்கனவே, ஊதியக்குழுவால் நிர்ணயித்து வழங்கப்பட்ட ஊதியத்தையே டிசம்பர் மாதத்துக்கும் வழங்க வேண்டும் என அந்தந்த துறைகளுக்கும், மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்களுக்கும் தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி