பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனது Optionalproficiency தேர்வை, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 18ம் தேதிவரை CBSE நடத்துகிறது. 2014ம் ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு இறுதியாண்டு
தேர்வை எழுதும் மாணவர்களுக்கானது இத்தேர்வு.மாணவர்களின் திறன்கள் மற்றும் ஆரோக்கிய மனநிலையை அளவிடுவது, படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை ஊக்குவிப்பது, மாணவர்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவித்து, தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவது போன்ற பலவற்றை தனது நோக்கங்களாக இத்தேர்வு கொண்டுள்ளது.
இத்தேர்வு, பத்தாம் வகுப்பில் ஒரு CBSE வாரிய மாணவர் படிக்கும் 5 முக்கியப் பாடங்களிலும் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி தேர்வு உண்டு. ஒரு நாளைக்கு ஒரு தேர்வு நடத்தப்படும். இது பேப்பர் - பேனா அடிப்படையிலான ஒரு தேர்வு.ஒவ்வொரு தேர்வுக்கு 2.5 மணிநேரம் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இத்தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்தம் 100 மதிப்பெண்கள். கேள்விகள், 9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டங்களின்அடிப்படையில் இருக்கும்.இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் இறுதிவரை சமர்ப்பிக்கலாம்.
தேர்வு தேதி விபரங்கள்
ஏப்ரல் 14 - ஆங்கிலம்
ஏப்ரல் 15 - கணிதம்
ஏப்ரல் 16 - அறிவியல்
ஏப்ரல் 17 - சமூக அறிவியல்
ஏப்ரல் 18 - இந்தி.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி