பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2013

பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:–

மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை

ஒரு சில பள்ளிகளில் பொருட்கள் காணாமல் போவதாகவும், பள்ளிக்கூட வளாகத்திற்குள் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளுக்குள் அத்துமீறி செல்வதாகவும், அவர்களால் பள்ளிக்கூட பொருட்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.எனவே இத்தகைய நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்து தவிர்க்கவேண்டும். இது தலைமை ஆசிரியர்களின் கடமை.பள்ளிக்கூட மாணவர்–மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு தேவை. மாணவர்கள் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு பாதிக்காத வகையிலும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்குஇடையூறு ஏதும் நேரிடாத வகையிலும் பாதுகாப்புஅளிக்கப்படவேண்டும்.

பொருட்களுக்கு பாதுகாப்பு

அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்தினுள் பள்ளியைச்சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலை கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளிக்கூட பொருட்களுக்கு பாதுகாப்பு குறைவு எந்தக்காரணம்கொண்டும் வரக்கூடாது. இந்தஅறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு அதன்படி நடக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி