
ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்டுள்ள, நம் நாட்டினரின் அனைத்து விவரங்களும், அமெரிக்க உளவு அமைப்புடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள, அமெரிக்க நிறுவனத்திற்கு
வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஆதார் அடையாள அட்டை திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ வலியுறுத்தி உள்ளது.
தனி ஆணையம்:
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், தனி அடையாள எண்ணுடன், அட்டை வழங்கும் திட்டத்தை, 'ஆதார்' என்ற பெயரில், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தனி ஆணையம் உருவாக்கப்பட்டு, 'இன்போசிஸ்'கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த, நந்தன் நிலேகனி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான், மத்திய அரசின், சமையல் காஸ் மானியம் உட்பட, பல பணப்பலன்கள் வழங்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு, பல மாநில அரசுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.சட்டசபை தீர்மானம்:சமீபத்தில், மேற்கு வங்க மாநில அரசு, 'ஆதார் அடையாள அட்டை திட்டமே வேண்டாம்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம், அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்துள்ளதும், அந்த அமெரிக்க நிறுவனம், அந்நாட்டின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள தகவலையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனம்:
நாட்டின், 120 கோடி மக்களுக்கும் அடையாள அட்டை வழங்குவது, அந்த அட்டையில், அட்டைதாரரின் அனைத்து தகவல்களையும், சிறிய குறியீட்டில் உள்ளடக்குவது, அட்டைதாரர்கள் குறித்த தகவல் தொகுப்பை பராமரிப்பது போன்ற பணிகள், பல அமெரிக்க நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அமெரிக்க நிறுவனத்திற்கு, இந்தியர்களின் அனைத்து தகவல்களும் போய் சேர்ந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, ஆதார் அடையாள அட்டை திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என, அந்த கட்சி கோரியுள்ளது.
அதிர்ச்சி அதிகரிப்பு:
ஏற்கனவே, இணையதளங்கள் வாயிலாக, இந்தியர்கள் மற்றும் மத்திய அரசு மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றத்தை, அமெரிக்க உளவு அமைப்புகள் இடைமறித்து, அவற்றை ரகசியமாக கண்காணிப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தகவல், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆதார் திட்டத்திற்காக, பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் ஒன்றுடனும், அந்த அமைப்பு, ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, தகவல்களை பரிமாறி வருவதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி