மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2013

மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி.


மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி.

தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன்
சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு செய்ய முயற்சி நடந்துவருகிறது.ஏற்கனவே பேஸ்புக்குடன் இணைந்துள்ள யு2யோபியா மொபைல் நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து இச்சேவையை வழங்க உள்ளதாக தலைமை நிர்வாகி சுமேஷ் மேனன் ராய்ட்டர் செய்திப்பிரிவுற்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

சிறிய கோட் நெம்பரை டயல் செய்தாலே ட்விட்டருக்குள் எளிதாக நுழைய முடியும்.யு2யோபியா நிறுவனத்தின் மூலம் டேட்டா இணைப்பு இல்லாமலேயே பேஸ்புக்கையும், கூகுள் டாக்கையும் 11 மில்லியன் சந்தாதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது. இச்சேவை தொடங்கப்பட்டால் செல்போன் வைத்திருப்பவர்கள் ட்விட்டருக்குள் எளிதில் நுழைய முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி