சென்னையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மொட்டையடித்து பேரணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2013

சென்னையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மொட்டையடித்து பேரணி.




தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இன்று சென்னை எழும்பூர்
ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆசிரியர்கள் கூடினார்கள். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரிஆசிரியர்–ஆசிரியைகள் வந்திருந்தனர். பேரணிக்கு மாநில தலைவர் மணிவாசகம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் ரபி, பாலசுப்பிரமணியன், வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய அரசு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன், ‘ஐபெக்டோ’ அமைப்பின் தென்இந்திய செயலாளர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். வந்திருந்த ஆசிரியர்களில் 100 பேர் மொட்டையடுத்து பேரணியில் பங்கேற்றனர். பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை, தெற்கு கூவாம் ஆற்றுச் சாலை ஓரமாக சிந்தாதிரி பேட்டையை சென்றடைந்தது.

பேரணியில் சென்றவர்கள், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும், அரசாரணை 720–ஐ திருத்தம் செய்ய வேண்டும், தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் எனபன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோரிக்கை அட்டைகளையும் ஏந்தி சென்றனர். பேரணியில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அமைப்பின் மாநில செயலாளர் வின்சென்ட் டி.பவுல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ், மாநில பொருளாளர் ஞானகணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி முடிந்ததும் சங்க மாநில தலைவர் மணிவாசகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள், முதல்–அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக கோட்டை சென்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி