கால தாமதமாக விண்ணப்பித்ததாக கருணை வேலை மறுப்பு :கரூர் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

கால தாமதமாக விண்ணப்பித்ததாக கருணை வேலை மறுப்பு :கரூர் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.


தந்தை இறந்து, 11 ஆண்டுகளுக்குப் பின்,கருணை அடிப்படையில் வேலை கோரிய, மகனின் விண்ணப்பத்தை நிராகரித்த, கரூர் கலெக்டரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம்
ரத்து செய்தது.நான்கு வாரங்களில், வேலை வழங்கும்படி உத்தரவிட்டது.கரூர் மாவட்டம், காவூர் தாலுகா, பாப்பையம்பாடியில்,கிராம உதவியாளராக, மணிவேல் என்பவர்பணியாற்றினார்.

2001ல், மணிவேல் மரணமடைந்தார்.கருணை அடிப்படையில் வேலை கேட்டு,அவரது மனைவி, 2001, மார்ச்சில் விண்ணப்பித்தார்.போதிய தகுதி இல்லை என்பதால், அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை. மணிவேலுவின்மகன், அழகேசன்.தந்தை இறக்கும் போது, அழகேசன், சிறுவனாகஇருந்தார். 2012ல், பிளஸ் 2 முடித்தார். அதன்பின்,கருணை வேலை கோரி, கரூர்கலெக்டருக்கு விண்ணப்பித்தார். காலதாமதமாகவிண்ணப்பம் செய்ததாக கூறி, கரூர் கலெக்டர்,கடந்த மாதம் நிராகரித்தார். ஊழியர் இறந்து,மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்காததால்,மனுவை நிராகரிப்பதாக,தெரிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து,சென்னை உயர்நீதிமன்றத்தில், அழகேசன், மனுத் தாக்கல் செய்தார்.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சுடலையாண்டி, ""மனுதாரரின் தந்தை இறந்த உடன், அவரது தாயார், கருணை வேலை கோரினார். அது, பரிசீலிக்கப்படவில்லை.மணிவேல், 18 வயது நிரம்பி,மூன்று ஆண்டுகளுக்குள்,கருணை வேலை கோரி விண்ணப்பித்து விட்டார். இதில்,கால தாமதம் இல்லை,''என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி சுப்பையா பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் தாயார், குறித்தகாலத்துக்குள்விண்ணப்பித்துள்ளார். போதிய தகுதி இல்லாததால், அவரது விண்ணப்பம்பரிசீலிக்கப்படவில்லை. அவரைத் தொடர்ந்து, 18 வயது நிரம்பிய பின், மூன்று ஆண்டுகளுக்குள், மனுதாரர் விண்ணப்பித்துள்ளார். இதை, காலதாமதம் எனக்கூற முடியாது.எனவே, காலதாமதமாக விண்ணப்பித்தார் என்கிற முகாந்திரத்தின்அடிப்படையில், கருணை வேலை வழங்குவதை மறுக்க முடியாது.கரூர், கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் விண்ணப்பத்தை சாதகமாக பரிசீலனை செய்து,நான்கு வாரங்களுக்குள், தகுதியான பணியில் நியமிக்க வேண்டும்..இவ்வாறு,நீதிபதி ஆர்.சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி