வார இறுதி நாள் விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பணியிடை பயிற்சி நடத்தக் கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2013

வார இறுதி நாள் விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பணியிடை பயிற்சி நடத்தக் கூடாது.


வார இறுதி நாள் விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பணியிடை பயிற்சி நடத்தக் கூடாது என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணியின் எருமப்பட்டி வட்டாரக் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அலங்காநத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளி முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை முறையின் கீழ் இணையதளத்தில் மாணவர்களின்விவரம், பள்ளியின் விவரம், ஆசிரியர்களின் விவரம், ஆதார் அடையாள அட்டை விவரங்களை பதிவு செய்வது, மாணவர்களின் புகைப்படத்தை சேகரித்து, தனிக்குறியீடு எண்ணை கோப்பு எண்ணாகப் பயன்படுத்தி குறுந்தகடு தயாரித்து அளிப்பது, அளிக்கப்பட்ட விவரங்களை மீண்டும் சரிபார்த்து அளிப்பது போன்ற கூடுதல் பணிகளை பள்ளித் தலைமையாசிரியர், வகுப்பாசிரியர்களுக்கு அளிப்பதைமுழுமையாகக் கைவிட வேண்டும்.

தனியார் இணையதள மையங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளுக்கு செலவினத் தொகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சனி, ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாள்களில் பணியிடை பயிற்சி வகுப்புகள், பள்ளிக் கல்விசார் பணிகளைக் கட்டாயப்படுத்தி அளிப்பதைக் கைவிட வேண்டும்.அவ்வாறு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு ஈடு செய் விடுப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வருகைச் சான்று வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி