பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2013

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிய உத்தரவு.


பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவி யரின் விவரங்களை, வாரத்திற்கு, எட்டு மாவட்டங்கள் வீதம், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியரின் விவரங்களை, தேர்வுத் துறை, ஏற்கனவே வழங்கிய படிவத்தின் மூலம், தலைமை ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். இந்த விவரங்களை பெறும் பணியை, 10ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுத் துறைஉத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அந்த விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். ஒரே நேரத்தில், அனைத்து மாவட்ட விவரங்களும், அப்லோட் செய்ய முடியாது என்பதால், ஒரு வாரத்திற்கு, எட்டு மாவட்டங்களைச்சேர்ந்த விவரங்கள் மட்டும் பதிய வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த மாவட்டங்கள், எந்தெந்த தேதியில், இணையதளத்தில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஜன., 10ம் தேதிக்குள், இந்த பணி முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜன., இறுதியில், செய்முறை தேர்வு எழுதும் மாணவ,மாணவியருக்கு, பதிவு எண்கள் வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி, முதல் வாரத்திலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில் இருந்தும், செய்முறை தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி