அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2013

அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும், 90 சதவீதம் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்' என, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள நாட்காட்டி, 2013-14க்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப்பட்ட விடுமுறையைப் பட்டியலை உடன் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பல யூனியன்களில், மூன்று சதவீதம் ஊதிய உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்தாமல், காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.இச்செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. உடனடியாக நடைமுறைப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும், 90 சதவீதம் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இ.எம்.ஐ.எஸ்.,ல், மாணவர்களின் விவரங்கள், குடும்ப விவரங்கள், ஃபோட்டோ இணைத்தல், ஆதார் எண் விவரங்கள் போன்றவைகளை மேற்கொள்ள ஆகும் செலவை, பள்ளிஅல்லது பராமரிப்பு மானிய நிதியில் செய்து கொள்ள, உரிய உத்தரவுகள் வழங்க வேண்டும்.பள்ளி வேலை நாள் இல்லாத நாட்களில், எஸ்.எஸ்.ஏ., மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணியிடைப் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு, பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான வருகைச் சான்றும், அந்நாளுக்குறிய ஈடு செய்ய விடுப்பு அனுமதியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசின் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஆசிரியர்களின் ஊதியத்தில் கடந்த ஆண்டு, ஜூலை முதல், மாத சந்தாவாக, 150 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான அடையாள அட்டையை, ஒரு சிலருக்கு மட்டுமே பெற்று வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்று வழங்க,நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி