இந்திய கல்வியின் தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடி நிதி உதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

இந்திய கல்வியின் தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடி நிதி உதவி


உலக கல்வி தரத்திற்கு இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என கன்னியாகுமரியில் நடந்த அகில இந்திய கருத்தரங்கில்
தகவல் தெரிவிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 43 சிறப்பு பேராசிரியர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு கன்னியாகுமரியில் 2 நாட்கள் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து தேசிய கல்வி மேம்பாட்டு கழக தலைவர் டாக்டர் என்.ஆர்.ஷெட்டி பேசியதாவது:உலக அளவில் தர வரிசை பட்டியலில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் கூட இந்தியா இடம் பெறவில்லை. இந்த நிலையை மாற்றவும் இந்தியா சர்வதேச அளவில் போட்டியிடத் தக்க வகையில் கல்வி தரத்தை உயர்த்தவும் வகை செய்யும் விதமாக உலக வங்கி இந்தியாவுக்கு ரூ.1400 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மாநில அரசுகளின்உதவியோடு அரசு, அரசு உதவிபெறும், மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பொறியியல் கல்லூரிகள் தங்களின் தரத்தை மதிப்பீடு செய்து வெளியிடும் வகையில் சட்டம் வரவுள்ளது.இந்த நிலை ஏற்படும் பட்சத்தில் அது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

எக்ஸ்ட்ரா தகவல்

இந்தியாவில் 42 மத்திய பல்கலை., 286 மாநில அரசு பல்கலை, 129 நிகர்நிலைப் பல்கலை, 115 தனியார் பல்கலைக்கழங்கள் என மொத்தம் 572 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி