அரசு பள்ளி மாணவர்களுக்கு 1.58 கோடி பாட புத்தகங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2014

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1.58 கோடி பாட புத்தகங்கள்.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்காக, 1.58 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர்
மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.அவரது அறிவிப்பு:
ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 89 லட்சம் மாணவர்களுக்கு, 1.58 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டன. இந்த புத்தகங்கள், பள்ளிகளுக்கு, வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்காக, 81.53 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள, 22 பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கடந்த, 26ம் தேதியில் இருந்து, தனியார் பள்ளிகளுக்கு, புத்தகங்கள் விற்பனையாகி வருகின்றன.புத்தக விற்பனை குறித்து, ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால்,mdtntbc07@hotmail.comஎன்ற, இ - மெயில் முகவரியில் தெரிவிக்கலாம். இவ்வாறு, மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி