பொது தேர்வு பொறுப்பாளரை தேர்வுத்துறையே தேர்ந்தெடுக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2014

பொது தேர்வு பொறுப்பாளரை தேர்வுத்துறையே தேர்ந்தெடுக்கும்.


தேர்வுத் துறையில் புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, அரசு மற்றும்
உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு மையங்களுக்கான துறை அலுவலர்கள், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என, முக்கியபொறுப்புக்களுக்கான ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது.இதன்படி, பணிமூப்பு அடிப்படையில், பிளஸ் 2 தேர்வுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பிற்கு, பட்டதாரி ஆசிரியர்கள் என, பட்டியல் தயாரித்து, இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தலைமை தேர்வாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறுவோர் என அனைத்து முக்கிய பொறுப்புகளில் இடம் பெறுவோரை, தேர்வுத்துறை இயக்குனரே முடிவு செய்வார். இதன் மூலம் ஒரு சில கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே நீடிக்கும் "இணக்கமான உறவு" முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி