பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்; தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2014

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்; தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு


பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த விவரங்களை, பிப்ரவரி 15–ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒவ்வொரு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர் ஆகியோருக்கு இந்திய தேர்தல் கமிஷன் எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

3 ஆண்டுகள்

பணிபாராளுமன்ற தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும், நடத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முன்வந்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதிகாரிகளைஇடமாற்றம் செய்வது குறித்த சில முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.அதன்படி தேர்தல் பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணியாற்றும் எந்தவொரு அதிகாரியும் அவரது தற்போது பணியாற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து இருக்க அனுமதிக்க கூடாது. அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் பணியில் இருக்க கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளை முடித்திருக்கும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தில் பணியாற்றக்கூடாது அல்லது 31.5.2014–க்குள் 3 ஆண்டுகளை முடித்திருக்கும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தில் பணியில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது. தேர்தல் கமிஷன் அறிவிக்கும் இந்த தேதியை பல மாநில அரசுகள் சரிவர பின்பற்றவில்லை என்று புகார்கள் வருகிறது.

எந்தெந்த அதிகாரிகள்?

எனவே தேர்தல் கமிஷன் குறித்துள்ள இந்த தேதியை கணக்கிட்டு தேர்தல் கமிஷனின் உத்தரவை பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள் போன்றவர்களுக்கு மட்டுமல்ல துணை கலெக்டர்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் போன்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும்.போலீஸ் துறையை பொறுத்தவரையில் தேர்தல் கமிஷனின் அறிவுரை சரக ஐ.ஜி., டி.ஐ.ஜி, ஆயுதப்படை கமாண்டன்ட், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் சூப்பிரண்டு, துணை மண்டல தலைமை அதிகாரி, இன்ஸ்பெக்டர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும். மேலும் சப்–இன்ஸ்பெக்டர்கள் தங்கள் சொந்த தொகுதிக்குள் பணியாற்ற கூடாது.அவர்களும், கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பகுதிகளில் இருக்க கூடாது அல்லது. 31.05.2014 அன்று 3 ஆண்டுகளை முடித்திருந்தால் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும். பணியிட மாற்றம் செய்யும் போது யாரும் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பப்படக்கூடாது.

15–ந்தேதிக்குள்...

கடந்த தேர்தலில் சரியாக பணியாற்றாத அதிகாரிகள், குற்ற விசாரணைக்கு உட்பட்டு இருப்போர், வழக்கில் சிக்கியிருப்போர் போன்றவர்களை தேர்தல் பணியில் நியமிக்கக்கூடாது.இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள இந்த அறிவுரையின் கீழ் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய அனைவரும் உடனடியாக அந்தந்த மாவட்டங்களை விட்டு வெளியே அனுப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் இந்த உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்து உள்ளனர். தேர்தல் கமிஷன் கொடுத்துள்ள இந்த உத்தரவுகளை பின்பற்றியது குறித்த விவர அறிக்கையை பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி