சென்னை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: பிப்.5ம் தேதி தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2014

சென்னை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: பிப்.5ம் தேதி தொடக்கம்


சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது.

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச்3ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள்எழுத உள்ளனர். தேர்வுக்கு முன்னதாக அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்முறைத் தேர்வுக்கான தேதிகளை முடிவு செய்வார்கள். இருப்பினும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடித்து அதில் மாணவர்கள் பெற்ற அகமதிப்பெண்களை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் 54 ஆயிரம் மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்

சென்னை மாவட்ட பள்ளிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் தேதி இன்று வெளியாகும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி