16,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2014

16,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் நியமிக்கப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என்றாலும் அனைத்துப் பணி நாள்களிலும் முழுநேரமும் பணியாற்றுகின்றனர்.முழு ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் இவர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.பகுதி நேர சிறப்பாசிரியர்களில் பலர் வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதால், அவர்கள் பெறும் ஊதியம் உணவு, தங்குமிடத்துக்குக்கூட போதுமானதாக இல்லை.தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த ஓராண்டாகப் போராடியும்அரசு கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் முழுநேர சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8-5-2013-இல் வெளியிட்டது. இவர்களுக்கு ரூ. 20,000 ஊதியம் வழங்கப்படவுள்ளது.பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவர்களில் தகுதி உடையவர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தி பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

11 comments:

  1. adhalam irrukattum last year junela nadantha part time special teacher interview mudingee no furthur information wht about that

    ReplyDelete
  2. yov! unakkulam pesa thaguthiye kedaiyadhu. pona varusam saadhi sangam nadathuranu oora koluthi kolambu vechavan nee. idhula idaiyila vandhu yedhukku labodhibongura????..... nanum un saadhidhanya. aana un katchila kallavittu yeriya. nee ipdilam pesuna makkal unnaku vote potruvangala??? modhal ah urupadiya oru katchiyoda 1 maasamavadu olunga kootani vechirukkia???? pesa vandhuttarrrrrruu.... poya po nee yeppo ninnalum unakku deposite gaali dhan????

    ReplyDelete
    Replies
    1. election vandha katchila erukura kaludhai kooda ipdidhan kanaikkum

      Delete
  3. Mr . Ramadas unakum ithukum samantham ila but ne ulla vara why ?

    ReplyDelete
  4. Salary avankalukku un SOTHULA ERUNTHU 16000 PERUKKU NEE THARUVIYA PATHIL SOLLU pavinkala yenda yenka polappula mannu podurinka TEACHERS KU NALLAURAILA EPPA THAN """" EXAM""" VACHU EDUKKURANKA """ athaium kedukka pakkuraya nee nallla eruppiya?????

    ReplyDelete
  5. mr ramadas part time teachers interview nadathum pothe ithu part time velaithan weekly 3 days aduvum half day than permanent illai nu solli than appoint pandranga nanum ponen but join pannavillai ippa vanthu permanent panna sonna eppadi ellathukum sammatham solli than join pandranga ippa vanthu ippadi ketal neenga election la oru katchiku 2 seat othikitu kadaisi nerathula ella thoguthiyum keta tharuvingala ponga sir unga velaiya parunga

    ReplyDelete
  6. Yen antha16 000 pertayum panam vangitayakum..

    ReplyDelete
  7. wht abt d part time special teacher appnmt for the 2013june cv completed candidate?

    ReplyDelete
  8. Ayya maruthuvarea tea innum varulaya

    ReplyDelete
  9. Ayya mani10 aaiduchu innum kadaiya saathala neenga udanea oru poottu kondu vaanga.

    ReplyDelete
  10. Ayya Ramdoss, Part time computer teachersla pathi peru PGDCA mudichavanga appa b.ed computer science padichavanga enga poradhu. poya po un velaiya mattum paruya suitcase enga readya irukkunnu....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி