ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2014

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்.


தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக

மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிடஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரிமுதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன.சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக்கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக இருக்கும் என்பதால் இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும் அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை.

2 comments:

  1. nice idea. keep it up.

    ReplyDelete
  2. if teachers want change their address,phone number,e.mail id, please update that also with old profile.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி