ரூ.2 லட்சம் வரை அனுமதி : ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2014

ரூ.2 லட்சம் வரை அனுமதி : ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்.


அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்துவதை போல, ஓய்வூதியர்களுக்கு தனியாக மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு
பட்ஜெட்டில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான ஆய்வு செய்து ஓய்வூதியர்கள், அவர்களின் மனைவி அல்லது குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதியமருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அனைத்து ஓய்வூதியர்கள், அவரது மனைவிகள் அல்லதுகுடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் செயல்படுத்தப்படும்.

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு அமலில் இருக்கும் 4 ஆண்டுகள் வரை ஸீ2 லட்சம் வரை காப்பீடு உதவி பெற முடியும்.ஓய்வூதியரின் மனைவியும் ஓய்வூதியராக இருக்கும் பட்சத்தில் யாராவது ஒருவரிடம் இருந்து மட்டுமே காப்பீடு திட்டத்துக்கான தொகை பிடித்தம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி