அங்கீகாரம் பெற 203 பள்ளிகள் காத்திருப்பு அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

அங்கீகாரம் பெற 203 பள்ளிகள் காத்திருப்பு அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்.


தனியார் பள்ளிகள் அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அங்கீகாரம் கிடைக்காமல் கோவையில் 203 பள்ளிகள் பரிதவித்து வருவதாக,தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார்தெரிவித்துள்ளனர்.கடந்த
எட்டு மாதங்களாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் கொண்ட குழு,பள்ளிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு மார்ச் 15வரை, கல்வித்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில், கோவை கல்வி மாவட்ட அலுவலர் அங்கீகாரம் வழங்க தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாகவும், விண்ணப்பங்களை சமர்ப்பித்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு தனியார் பள்ளிகள் நலச்சங்க மாநில தலைவர் மாயாதேவிசங்கர் கூறியதாவது:அங்கீகாரம் பெறுவதற்குள், பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகிறோம். கட்டட உறுதி, தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சான்றிதழ் வாங்குவதற்குள் பல்வேறு விதங்களில் அலைக்கழிக்கப்படுகிறோம். ஒவ்வொரு சான்றிதழ் பெறுவதற்கும், 5000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் தர வேண்டியுள்ளது.இந்நிலையில், தாலுகா அலுவலகத்தில் இருந்து சான்றிதழ் பெறுவதற்கு எட்டு மாதங்களுக்கும் மேல் காத்திருக்கின்றோம்.அரசு விதிமுறைப்படி அனைத்து பணிகளும் முடித்தாலும், சான்றிதழ் வழங்க தாமதப்படுத்துவால் சிரமப்படுகின்றோம். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு ஆறு மாதங்களாகியும் அங்கீகாரம் இதுவரை வழங்கவில்லை.கோவை மாவட்டத்தில், இதுபோன்று 203 நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் 15க்கு பிறகு பள்ளிகள் மூடப்பட உள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து அங்கீகாரம் வழங்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கூறுகையில், ""பள்ளிகளில் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து தகவல்களும், அவர்களின் அங்கீகாரம் சார்ந்த சான்றிதழ்களும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்."குறைகளை சரி செய்தால் தாமதம் ஏற்படாது'முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ""பள்ளிகள் நடத்துவதற்கு, இருவழி பாதை, 50 மாணவர்களுக்கு ஒரு கழிவறை, பள்ளி இடப்பரப்பளவு, விளையாட்டு மைதானம்உட்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தனியார் பள்ளிகள் ஏதேனும் குறைபாடுகளுடன் தான் சமர்ப்பிக்கின்றனர். மேலும், இடநிர்ணயம் சார்ந்த குழப்பத்தில் சில பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கலாம். கல்வித்துறை சார்பில், தாமதம் என்பது ஏற்பட வாய்ப்பில்லை. குறைபாடுகளை சரிசெய்தால், அங்கீகாரம் கிடைப்பதில் எந்த பிரச்னைகளும் இருக்காது. கல்வியாண்டுமுடிவதற்குள், இதற்கான தெளிவான அறிவிப்புகள் வெளியாகும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி