போனஸ் அறிவிப்பில் புறக்கணிப்பு: பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

போனஸ் அறிவிப்பில் புறக்கணிப்பு: பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம்.


தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்த பொங்கல் போனஸ் பட்டியலில், பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அரசின் அறவிப்பின்படி
கிரேடு அடிப்படையில், "சி', "டி' பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், ஊராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், காப்பாளர்கள், பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பிரிவுக்கு ரூபாய் 1000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 500ம் பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது.இதற்காக, மாநில அரசு ரூபாய் 308 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோம் என்ற கனவுடன் காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, போனஸ் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டது, பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.தமிழ்நாடு பகுதிநேர மற்றும் சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ""ஓய்வூதியதாரர்கள் உட்பட அனைவருக்கும், அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. ஆனால், இப்பட்டியலில் பகுதி நேர ஆசிரியர்கள் இடம்பெறவில்லை.

குறைந்தபட்சம் 2012-13 நிதியாண்டில் 240 நாள் பணியாற்றிய அனைவருக்கும் போனஸ் வழங்கும்போது, இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களுக்கு வழங்காதது ஏன் என்று புரியவில்லை. தலைமை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இதற்கான எவ்விதஅறிவிப்பும் இல்லை; ஒன்றும் செய்யஇயலாது' என்று தெரிவித்தனர். மாநிலம் முழுவதும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டபகுதி நேர ஆசிரியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்,'' என்றார்.

1 comment:

  1. பகுதிநேர ஆசிரியர்களான நாம் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் இலவு காத்த கிளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல்லைக் கடித்துக் கொண்டு காலத்திற்குப் பொருந்தாத மிகக் குறைந்த பட்ச ஊதியத்தையும் கால தாமதமாக பெற்றுக் கொண்டு வாழ்க்கையை செய்வதறியாது ஓட்டிக் கொண்டுள்ளோம். நம்மில் பெரும்பாலானோர் 40 வயதைத் தாண்டியவர்களே. வயது, பணிப் பாதுகாப்பு பற்றிய கவலை ஒருபுறம். வீடு, மனைவி, மக்கள் பற்றிய கவலை மறுபுறம். பிள்ளைகளோடு போட்டி போட்டுக் கொண்டு இண்டர்வியூ செல்லும் நிலை. இந்நிலையில் அனைவருக்கும் 'போனஸ்' அறிவிப்பு குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு கூட கவனிக்காமல் புறக்கணிக்கப் பட்டுள்ளது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. இப்படிக்கு வருத்தப்படும் வயதானோர் சங்கம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி