எஸ்.சி. எஸ்டி மாணவர்களின் உதவி தொகை குறைப்புக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2014

எஸ்.சி. எஸ்டி மாணவர்களின் உதவி தொகை குறைப்புக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு.


கோவை அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் நிர்வாகங்கள் சங்க தலைவர் கே.பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

கோவை அண்ணா பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ள (இணைப்பு) எங்கள் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம்.சுயநிதி கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயத்தின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிக்கிறோம். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கிடையே, தனியார் சுய நிதி கல்லூரிகளில் நிர்வாக இடங்களில் சேர்ந்து படிக்கும் கல்வி உதவி தொகை பெறும் இப்பிரிவு மாணவர்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டில் படிக்கும் இதே பிரிவு மாணவர்களுக்கு தரும் கல்வி உதவி தொகையை தரும் வகையில் தமிழக அரசு கடந்த டிசம்பர் 9ம் தேதி ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் நிர்வாக இட ஒதுக்கீட்டில் படிக்கும் இந்த பிரிவு மாணவர்களிடம் முழு கட்டணத்தையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கே.துரைசாமி ஆஜராகி, இந்த அரசாணையால் கல்லூரி நிர்வாகங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

நிர்வாக இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதை ஏற்று அந்த அரசு ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி