பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள்,கல்வித்துறை நடத்த வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2014

பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள்,கல்வித்துறை நடத்த வலியுறுத்தல்.


'பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி, பிப்ரவரியில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென,' உயர்,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தீர்மானம்: அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களை நியமித்த முதல்வர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிப்பது, ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் 1:20 படி, ஆசிரியர்களை பணி நிரவல் செய்யவேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். கல்வித்துறை, பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, மே- இறுதிக்குள் நடத்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை, வலியுறுத்தி, மாநில அளவில் அந்தந்த மாவட்டதலைநகரங்களில், பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவதென, தீர்மானித்தனர். மாநில நிர்வாகி சேதுசெல்வம் நன்றி கூறினார்.

1 comment:

  1. bt asst social science from thanjavur to chennai school poga virupam irupin contact 9442235157

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி