இளநிலை பயிற்சி அலுவலர் பணி: பதிவு மூப்பு விபரம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

இளநிலை பயிற்சி அலுவலர் பணி: பதிவு மூப்பு விபரம் வெளியீடு.


பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிகளுக்கான பதிவுமூப்பு விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகாராணி கூறியதாவது: டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ., தகுதியுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிளான பதிவுமூப்பு விபரம் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணை இயக்குனரால் வெளியிடப்பட்டுள்ளது.இதில், திண்டுக்கல் மாவட்ட பதிவுதாரர்கள் தொடர்பான விபரங்கள்www.dindigul.tn.nic.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.எனவே, தகுதியுள்ளவர்கள் தங்கள் பதிவு மூப்பு விபரத்தை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் ஐ.டி.ஐ., தகுதியுள்ளவர்கள் ஜன.,20க்குள், டிப்ளமோ தகுதியுள்ளவர்கள் ஜன.,21க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வர வேண்டும்.வரும்போது, அசல் கல்வி சான்றுகள், சாதிசான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

1 comment:

  1. Coimbatore district eppadi pakkaradu friends?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி