43வது சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் சிவகங்கை மாவட்ட அளவில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே பங்கேற்க விண்ணப்பித்துள்ளது. முறையான தகவலை தெரிவிப்பதில்லை, என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும்
சர்வதேச தபால் துறை சார்பில், ஜன.5ல் "கடிதம் எழுதும் போட்டி" நடக்கிறது. மண்டல அளவில் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு, "இசை வாழ்க்கையில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது" என்ற தலைப்பில், தென்மண்டல அளவில் மதுரையில் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பம் தபால் துறை சார்பில்,கடந்த மாதம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.விண்ணப்பிக்க டிச.18ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி குறித்த அறிவிப்பு, பெரும்பாலான பள்ளிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை, ஒரே ஒரு பள்ளியை சேர்ந்தவர்கள் மட்டுமே முறையான தகவலோடு பெயர் கொடுத்துள்ளனர்.அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடிதம் எழுதும் போட்டி குறித்த அறிவிப்பு, அரசு பள்ளிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை. அப்படியே அறிவித்தாலும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் கடைசி இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறிவிப்பு வருகிறது.இது மட்டுமன்றி, பல்வேறு போட்டிகளுக்குரிய தகவல்களும் நீண்ட தாமதத்துக்கு பிறகேஅரசு பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அரசு சார்பில் நடத்தும் போட்டிகளுக்குரிய தகவலை முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி