டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? 'வன்கொடுமை' பாயும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2014

டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? 'வன்கொடுமை' பாயும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு


'தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், உத்தரவிட்டு உள்ளது.பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, டி.இ.டி., தேர்வில், அரசாணையின்படி, இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனருக்கு, புகார் அளித்தார்.

அரசாணை:

இந்த மனுவை ஆய்வு செய்து, மண்டல இயக்குனர், வெங்கடேசன், பள்ளி கல்வித் துறை செயலர் மற்றும் டி.ஆர்.பி., தலைவர் ஆகியோருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

என்.சி.டி.இ., (தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்) வழிகாட்டுதலை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, 181ல், டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீடு பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை அளிக்க வழி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், தேர்வை நடத்தும், டி.ஆர்.பி., அதை அமல்படுத்தாமல்புறக்கணித்துள்ளது; இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக, ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வில், தமிழக அரசின் கொள்கையை, 12ம் தேதி, முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளார். அதில், 'கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கு, 'நெட்' (தேசிய தகுதி தேர்வு), 'ஸ்லெட்' (மாநில தகுதி தேர்வு) எப்படி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதோ, அதுபோல் தான், ஆசிரியர் தகுதி தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என, முதல்வர் தெரிவித்து உள்ளார்.

உரிய நடவடிக்கை தேவை:

'நெட் - ஸ்லெட்' தேர்வுகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, மதிப்பெண்சலுகை அளிக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்நடவடிக்கை, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராகவும், தன்னிச்சையாகவும் அமைந்துள்ளது. கடந்த, 2011, நவ., 15ம் தேதியிட்ட அரசாணையில் (எண் 181) தெரிவித்த படி, ஆசிரியர் தகுதி தேர்வில், இடஒதுக்கீடு பிரிவினருக்கு,மதிப்பெண் சலுகை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இடஒதுக்கீடு பிரிவினருக்கான கொள்கையை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு மீது, எடுத்த நடவடிக்கை குறித்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலகத்திற்கு, பதில் தெரிவிக்க வேண்டும். இல்லை எனில், இந்த புகார் தொடர்பான விவரம், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு, வெங்கடேசன் கூறி உள்ளார். இது குறித்து, பிரின்ஸ் கூறுகையில், ''அரசாணையில், எந்த தவறும் இல்லை. மிக தெளிவாக உள்ளது. அமல்படுத்துவதில் தான், தவறு நடந்துள்ளது. 'மதிப்பெண் சலுகை அளிக்க முடியாது' என, எந்த உத்தரவும் சொல்லவில்லை. கடும் போட்டிக்கு இடையே, டி.இ.டி., தேர்வை எழுதுகின்றனர். அவர்களுக்கு, உரிய மதிப்பெண் சலுகையை அளிக்க, அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

39 comments:

  1. 1 month wait pannunga

    ReplyDelete
    Replies
    1. super sir thanks prins ida othukeedu vendum

      Delete
  2. Yenda 90 mark yeduka vakku illa thoo idhellam oru polappa nenga teacher agI yennada pudunga poringa

    ReplyDelete
    Replies
    1. i agree with u...... teacher agarathu pasangalukku padam nadatha vitta syllabusla kuda ida othukeedu keppanga friend.....

      Delete
    2. Kalviseithi admin, anonymous 11:17 soldra mathri 6 arivu illatha comendsa udanenea remove pannungka, manitharkalai mattum comments panna anumathingka. Pls. Avangka urimiya kekrangka, ivlo mosamana commends thevaiillai.

      Delete
    3. Comments pandrappavey ipdi Pesura neelam teacher aayi.... pasanga urupta mathiri than po

      Delete
    4. 150 ku 90 vanga mudila neeyelam teacher agi he he he

      Delete
    5. indian constitutional rightsai ivalavu iliva vimarsanam seiyum ungalal yeppadi partiality parakamal padam karpika mudium .ugalai pondra tharamillatha asiriyargal nade seeralium asiriyar avadharkae layakillai .manavargal paavam .population adipaddaiyil idavothikidu koduthal sc thaan adhikam apoo 18/ yanbathu meegavum kuraivu. vedrumandral appadi ida vodhikeedu vaipoma. majorityana makkaluku verum 18/ kodupathu poruka villaiya.

      Delete
    6. appdi patha ethukume ida othikidu kodukakudathu en trb net set tnpsc nu kodukiringa tnpscla lam mbc paningathan kami mark eduthu ulla pothunga ella edathulaum nanga wait pandram theriuma pona thadava na group 2la 0.5 la job miss panan ana enna vida 10 mark kamiya ulla mbc oruthar ku job kaditchathu ida othikudu appadigara parla oclam kuda sc cotala velaiku ponan athula konjamathu kadikuthenu nanga paravalanu iruntham ippa athaum tharama enga vaithula adikuringa intha pavathukalam anupavipinga only sc stku matoma ella niaum varinjukati2 vanthuduthu

      Delete
    7. ae 11.17 modha un tet mark and weightaga ah solu adhula erundhu un latchanam therunjudum periya ivan madiri pesura ne enna tet la 150ku 150 eduthutiya ella atleast 140 avdhu eduthiya illaela aparam ne ellam eduku mathavangala mattama pesura unakenna thakuthi eruku

      Delete
  3. enimel avunga exam elthunala job nu kondu vara poranga pola?mathavangalium humana parunga?

    ReplyDelete
  4. இதனால் இறுதியில் சாதிச் சண்டை வரப்போகிறது. சமத்துவத்தை நிலை நாட்ட தகுதியையா இழப்பது. ஆசிரியர் தகுதியைப் பெற்று பின்னர் இட ஒதுக்கீடு கோருங்கள். சிறுபான்மையரை மேலே யாரும் தடுக்கவில்லை. சிறுபான்மையரில் கூட தகுதியுள்ள ஆசிரியரால் மட்டுமே எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அரசு எண்ணுகிறது.

    ReplyDelete
    Replies
    1. nagarigamana ungal kootrai yaerkallam anal malae oru vetriyallar sollum anagarigathai yappadi porruthu kolvadhu thjaguthi irunthum tharrathai illakirar ippadiku tet verripatravar

      Delete
    2. நண்பரே நீங்கள் சொல்வதிலேயே பதில் உள்ளது...நாம் ஆசிரியர்கள் ..இதைவிட மோசமான வார்தைகள் வந்தாலும் நாம் நம் தகுதியையும் மரியாதையையும் விட்டு கொடுக்ககூடாது....அவர்களுக்கு நிகராக போட்டி போட்டு கொண்டு நாமும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டாமே......

      Delete
  5. Unmai yendraikum kasakum

    ReplyDelete
  6. seekirama praccanaiyai mudichi appointment podungapa.

    ReplyDelete
    Replies
    1. You are right. Until they come to a conclusion, they will stone at each other.

      Delete
  7. Nan yaraium kurai sollavillai manasachi thottu sollunga indraya potti ulagathil ida otukidu thevaya only talent accept ok

    ReplyDelete
  8. See the jaya news absented candidates tomorrow cv for u2012, 2013 candidates

    ReplyDelete
  9. before education nd talent all r same...cm amma never compromise in this....lets wait for d best....

    ReplyDelete
  10. இட ஒதுக்கீடு வேண்டாம் ....மனசாட்சி யே இல்லாத மனிதர்கள் ......தகுதி என்றால் எல்லாருக்கும் ஒண்ணு தான் ....

    ReplyDelete
  11. Prince sir ku adidravidar makkal sarbaga nanri nanri. ....

    ReplyDelete
  12. Tet case hearing today ennachu?

    ReplyDelete
  13. No justice in edn,
    more money less work in govt, but more work less money in pvt. no importance fr seniorty, exp, reserv. etc. present gvt collapsd edn system.







    ReplyDelete
  14. Sc mattum indiyavil erukkalam matravargal anumathi elai

    ReplyDelete
  15. ella statelayum tet vaikkattum athuvum sarithan but oru statela mark kuraithum tn mattum ellai endru sollum pothuthan ethu pondra nilai erpadugirathu. mattha statela seiyya mudivathai engu en mudiyavillai govt take good decission and solve this problem. GIVE EDA OTHUKKEDU

    ReplyDelete
  16. Neenga inimel 150ku 40 eduthal podhum nanga 90 edukanum ok

    ReplyDelete
  17. nan sc ellai. matra state mathri follow panna soldren

    ReplyDelete
  18. epdi pa,,,,,,,,,,,,,,, kodi kodi aandugal kollai labam sambathithu vittu, thaaltha pattavargalai vaithu velai vaangi bank balance-I uyarthi vaithu kondu, avargalai adimai paduthi vittu, avargalukana urimaiyai kodukamal, munnera vidamal thaduthu vittu, ida othukitilum vanjagam seiya ninaipavargal vaazhkaiyil munnerave mudiyathu....................!!!!!!!!!!!!!!!!!!?????????????????????/
    aayirakanakana aandugal adimai paduthi vittu ippoluthu itharkum vetu vaipathu gniyayam thaanaaaaaaaaaaaaaaaaaa?
    adikirathu 1 hour rest 2 minutes ahhhhhhhhhhh..............

    ReplyDelete
  19. வேண்டாம் வேண்டாம் சண்டை போட வேண்டாம். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும். வழக்குகளும் போராட்டமும் நல்லதே. காத்திருத்தலும் சுகமே. எல்லாருக்கும் நீதி கிடைக்கச் செய்வது முறையே.

    ReplyDelete
  20. சென்னை நீதிமன்ற வழக்கு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  21. ippa sc st kaarangatha athikama gvt job la irukkanga. bc karanga avangalukku seavagam seiranga. ean maadi meala maaty v2 kattunathu pathalaiya? entha kaalathula bc oc kaarangalukkutha maark thalarvu seiyanum..................

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசுவது என்பது ஒருவரின் நனவிலி மனத்தில் பதிவாகி இருக்கும் சாதி வன்மமே அன்றி வேறில்லை. தேவை மனநல சிகிட்சை.

      Delete
  22. naan jaathiya kuraiva sollala. ethukku maark thalarvunutha keakkirean? neengalea maark thalarvu keattu unkala thaalva ninachukitta naanga enna pannarathu...............?

    ReplyDelete
  23. as per govt act...idea othukidu seiyeveandiye situation pole

    ReplyDelete
  24. ellorum oru nimidam think panni paarunga....kalvi enpathu ellorukkum pothuvaanathu thaan..athe pola oru seithiyai or paadaththa memory pandrathu i mean padikkurathu ellorukkum onnuthan...potti irukkalaam but poraamai irukkakudaatunu periyavanga solluvanga...entha vishayaththa eduththaalum oru aim or target irukkum....atha adainthaal thaan victory...athula SC,ST,BC,BCM,MBC,OC nu ida othukkeedu padi target point ah adaiyaama victory nu solla mudiyumaa...population ratio va poruththu oru piriukku ivlo % percentage nu pirichanga...intha pirivu nammudaiya knowledge ku kidaiyaathu sir....entha pirivaaga irunthalum avargaludaiya knowledge capacity same thaan sir...posting la ida othukkeedu padi ketpathu nalam..but target mark la ida othukkeedu ketpathu nammala naame kurachu mathippidura maathiri irukkume nu think panni parththingalaa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி