ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம்: டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் காமெடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம்: டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் காமெடி.


மதுரையில், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற பலர், கல்விச் சான்றிதழ்களில், ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்றிருந்ததால் அதிகாரிகள் நொந்துகொண்டனர்.
ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சரிபார்ப்பு பணியில், 10 குழுக்கள் ஈடுபட்டன. முதற்கட்டமாக, தாள் 1ல் தேர்வான இடைநிலை ஆசிரியர்கள் 240 பேர் அழைக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் டி.டிஎட்., (ஆசிரியர் பட்டய பயிற்சி) 'ஒரிஜினல்' சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சான்றிதழ் நகலில், அரசிதழில் பதிவுபெற்ற (கெஜட்டட்) அதிகாரியிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், பலர் தங்களது கல்விச் சான்றில், ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம் பெற்று வந்திருந்தனர்.இதனால், 'யாரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற சாதாரண விஷயம் கூட தெரியவில்லையே,' என நொந்துகொண்ட அதிகாரிகள், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர்களை அழைத்து, சான்றொப்பமிட ஏற்பாடு செய்தனர்.முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், "முதல் நாளில் 240 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், ஒருவர் வரவில்லை. பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டது.23ம் தேதி முதல் டி.இ.டி., தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்," என்றார்.

11 comments:

  1. Paper 1 cv attend brothers middle school HM kita Gazattdd attest vangalama? Plz tel me urgent

    ReplyDelete
    Replies
    1. middle school hm kita vanga kudathu high school and higher secondary hm ta vangalm.

      Delete
    2. middle school hm, bt asst, doctors, ivanga kittayum vaangalam.

      Delete
    3. I got attestation from mid school bt. And finished my cv

      Delete
  2. Government school BT Assistant, PG assistant , middle school high school HM, GOVERNMENT doctor ivarkalidam vangalam

    ReplyDelete
  3. indha madhiri teachers kita padikara pasangalam romba nalllllllaaa varuvanga.... nal vazhthukal..

    ReplyDelete
  4. U verify gov lawyer is A or B grade

    ReplyDelete
  5. dear friends conduct sirtificate high school hm kitta vanginen. other xerox attested um avangakitta than vanginen.
    conduct certificatels 2 years than pottirukkanga. ithu pothuma? conduct certificate xerox panni attested vangina pothuma? or erandume originala irukkanuma? pls. sollunga friends. tomorrow C.V.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி