மாணவர்களிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

மாணவர்களிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு.


மாணவர்களிடம் "வாசிப்பு திறன்' குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அடிப்படை,கட்டட வசதிகள், மாணவர்களுக்கு தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட நிலையில், வட்டார மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் பணியை, ஆசிரியர் பயிற்றுனர்களின், சீனியர் பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதலாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தற்போது, பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை அறியும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது; பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு திறன் 50 சதவீதம் வரை தான் உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பணியாற்றும், ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகள் வாரியாக சென்று, மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறனை பரிசோதித்து, 100 சதவீதம் வாசிப்பு, எழுதும் திறனை உருவாக்குமாறு, கூறியுள்ளனர். பொங்கல் முடிந்த பின்,நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு, புதிய பணிகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி