2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை எப்போது ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை எப்போது ?


கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ்பெற்றுள்ளது.

இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என தெரிவித்துள்ளது.உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர் விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால்.

இதுவரை வரலாறு பாடத்துக்கான புதிய பட்டியல் வெளியிடப் படவில்லை2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.தற்போது முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில் தங்கள் நியமனம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணிநியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

7 comments:

  1. உறுதியாக எனக்கு theriyaadhu

    ReplyDelete
  2. trb pg assistant 2011-2012 tamil medium candidates trb or c.e.o office poratha irundhaal please inform pannunga i am thangavel thanga_music@yahoo.com or 9976147773

    ReplyDelete
  3. go to trb immediately ,don't waste your time

    ReplyDelete
  4. dear vijayaraj neenga go to trb immediately apadinu anupiirupadhu yaarukaakaa

    ReplyDelete
  5. dear vijayaraj neenga go to trb immediately apadinu anupiirupadhu yaarukaakaa

    ReplyDelete
  6. last one and half year we are waiting
    but still not proper response trb

    may be election date announce pannina we are waiting another four month also

    trb not going correct path.

    every moment we all fight.

    reg
    senthilkumar v

    ReplyDelete
  7. amma manasu vacha mattumthan muduium.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி