முஸ்லீம் கல்வி மேம்பாட்டிற்கான முன்முயற்சி திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

முஸ்லீம் கல்வி மேம்பாட்டிற்கான முன்முயற்சி திட்டம்!


தொழில்துறை திறன் முன்னேற்றம் உள்ளிட்ட அடிப்படை கல்வியை, முஸ்லீம் மக்களுக்கு வழங்கும் முன்முயற்சி திட்டம் நிறுவப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maulana Azad Taleem-e-Balighanஎன்ற பெயருடைய அந்த திட்டம், தேவையான கல்வியறிவு, அடிப்படைக் கல்வி, தொழில்துறை திறன் மேம்பாடு மற்றும் தொடர்ந்த கல்வி உள்ளிட்டவை, 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் உள்ள சுமார் 1 கோடி முஸ்லீம் இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் நிறுவப்பட்டுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறுபான்மை மக்களின் மத்தியில் கல்வியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட திட்டங்களின் வெற்றிகள், அம்முயற்சிகளை மேலும் விரிவுபடுத்த உற்சாகமூட்டுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப பள்ளிகளில் சேரும் முஸ்லீம் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்தாண்டுகளில் இருந்த 9.4% என்ற நிலையிலிருந்து, 14.2% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று, உயர்நிலைக் கல்விக்கு முன்னேறும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 7.2% என்ற அளவிலிருந்து 12.1% என்பதாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி