சுயநிதி பள்ளிகளின் பெயர் மாற்றம், அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

சுயநிதி பள்ளிகளின் பெயர் மாற்றம், அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பு.


தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால்,

அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளிஎன்று அழைக்கப்படும்.

மேலும் தொடக்க கல்வித்துறையில்உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் தவிர மற்ற சுயநிதி தொடக்க பள்ளிகள், சுயநிதி நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் என்ற புதிய இயக்குனரகத்தின்கட்டுப்பாட்டில்இருக்கும்.அதுபோல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில்உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகத்தின்கட்டுப்பாட்டில்இருக்கும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் என்பது சுயநிதி பள்ளிகள் இயக்குனரகமாக மாறும் என்று கூறப்படுகிறது.

இதனால் ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற நிலை தவிர்க்கப்பட்டுஅனைத்து மாணவர்களும் சமம் என்ற நிலை ஏற்படும். நாங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கிறோம் என்று யாரும் தற்பெருமையாக கூற இயலாத வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதை கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. கெட்டப்ப மாத்துனாலும், கேரக்டர மாத்த மாட்டாங்களே!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி