பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் கலக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் கலக்கம்.


"லேப்டாப்' திருடுபோன, பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பள்ளிகளில்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கும் வரை, "லோப்டாப்'களை தலைமை ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பில் பாதுகாக்க வேண்டும்.பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த "லேப்டாப்'கள் பல இடங்களில் திருடுபோனது.இதையடுத்து, "லேப்டாப்'களை பாதுகாக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், காவலர்களை நியமிக்கவும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவிக்கவும் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான தலைமைஆசிரியர்கள் கடைபிடிக்கவில்லை. இந்நிலையில்,"லேப்டாப்' திருடு போனால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமைஆசிரியர்கள், அதற்குரிய பணத்தை அரசு கணக்கில் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்தாத தலைமைஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே,"லேப்டாப்' திருடுபோன பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது. இதனால், சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி