அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை:பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை:பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு.


அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும், 15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இலவசமாக கணினி, லேப்-டாப் ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் இல்லாததால், அவை, பயன்படுத்தப்படாமல், முடங்கிகிடக்கின்றன.அதே சமயம், தனியார் பள்ளிகளில், கணினி கல்விக்காக, தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனாலும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். எனவே, அரசு பள்ளிகளிலும், கல்வி தரம் உயர, கணினி பாடப்பிரிவு துவங்கி, அதற்கான,ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, 'ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடப்பிரிவு துவங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது; ஆனால், செயல்படுத்தவில்லை.இதனால், கணினி துறையில், அரசு பள்ளி மாணவர்கள் பலர் ஈடுபாடு காட்டுவதில்லை.

கணினி பாடப் பிரிவில், பி.எட்., முடித்த பட்டதாரிகளும், வேலையில்லாமல் தவித்துவருகின்றனர்.பி.எட்., கணினி பட்டதாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுவதும்,15 ஆயிரம் கணினி பட்டதாரிகள், வேலைக்காக காத்திருக்கிறோம். அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு உள்ளது. ஆனால், பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினிக்கு என, தனியாக பாடப்பிரிவு இல்லை. பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

4 comments:

  1. INIYUM COMPUTER TEACHER POSTING CREATE PANUVANGANU KANAVU KANAATHEERKAL

    PATUCHA VELAIKKU THAKUNTHA AASIRIYAR ALLATHA PANI ITANKALUKKU SENTU

    KUTUMPATHTHAI KAAPPATHTHUNKAL................

    KANIPPORI AASIRIYARKALIN KURALAI KETKUMPOTHU MATTUM ARASIN KATHUKAL MOOTIKKOLKINTRANA..............

    ReplyDelete
  2. tamil nadu govt ku B.Ed computer science student ku la uyir &family nu onnu irrukarathaye maranthuttangala

    ReplyDelete
  3. computer science student um porattangal and court la case podanum nu govt nenairangalo ..... apadinu sonnalum no problem ellathukkum naanga ready

    ReplyDelete
  4. Computer Science B.Ed padichachu yappo valai poduvargal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி