ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, திருச்சி, கோவை உள்பட 5 இடங்களில் நடத்தப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டது.
இதனால், கூடுதலாக 46 ஆயிரத்தும் மேற்பட்டோர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின்www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் முதல் தாளில் 1,098 பேரும், 2-வது தாளில் 1570 பேரும் வெற்றிபெற்றுள்ளனர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பெயர் விவரங்கள் மாவட்ட வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. முதல்கட்டமாக முதல் தாளில் வெற்றிபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதமும் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, திருச்சி, கும்பகோணம், சேலம், மதுரை ஆகிய 5 இடங்களில் மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்த மண்டலத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,மதுரை மாவட்டங்கள் எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை-20 ( போன் நம்பர் 0452-2531754).
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 11, பேர்ட்ஸ் ரோடு, கண்டோன்மென்ட், திருச்சி-1 (போன் நம்பர் 0431-2416648).
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்கள் சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி ரோடு, சேலம்-7 (போன் நம்பர் 0427-2412160)
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மாதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் அருகில், கும்பகோணம் (போன் நம்பர் 0435-2431566)
கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 319, ஜி.எஸ்.டி. ரோடு, குரோம்பேட்டை, சென்னை-44 (போன் நம்பர் 044-22417714)
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewho r ready for case file against Relaxation then call me for immediate action 9952198486 pls each one join case with us
ReplyDeletewho r ready for case file against Relaxation then call me for immediate action 9952198486 pls each one join case with us
ReplyDeleteSir will all paper 2 ph candidates have chance to get job.
ReplyDeleteSir will all paper 2 ph candidates have chance to get job.
ReplyDeletePh candidate means?
ReplyDeletePhysically handicapped sir.maatru thiranaaligal.
ReplyDeleteFriend,
DeletePH quotala passed candidates very lesssss only
Be confident...all passed will get job
valga valamudan
sir 105 and 105 mel mark vanki tet 1 paperla ethana per
ReplyDelete