சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (12.03.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2014

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (12.03.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் நாளை ( 12.03.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன்
கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 21வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.நாளை தமிழக அரசின் சார்பில் அட்வகட் ஜெனரல் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கில் நாளை அரசின் நிலைப்பாடு தெரியவரும்.

13 comments:

  1. Single judge has been changed to double judge (bench).. Good change over..

    ReplyDelete
  2. NANPARKALAE enaku oru visayam thealivu paduthavum..central govt act padi tet KATTAYAM therci pera vendum...posting poda athiga mark and weightage central govt sonnargala?

    ReplyDelete
  3. தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு --‍ தின மலர் நாளேடு

    அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் ஆன வழக்கில், அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    மதுரை மாவட்டம் பாலமேடு கண்ணன் உட்பட, நான்கு பேர் தாக்கல் செய்த மனு:

    தகுதி தேர்வில்(டி.இ.டி) வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்களாக அரசு நியமிக்கிறது. இதன்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தகுதிகள் நிர்ணயித்து ஆசிரிய தேர்வு வாரிய (டி.ஆர்.பி)தலைவர் 2012ல் அறிவிப்பு வெளியிட்டார்.

    அதில் டி.இ.டி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பிளஸ் 2 பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சலுகை வழங்கப்படும்.பின் பணி நியமனம் மேற்க்கொள்ளப்படும். என உள்ளது.

    ஒவ்வொருவரும் பல்வேறு கால கட்டங்களில் பிளஸ் 2 பட்டம் படித்து வெளியேறுகின்றனர். இதனால் மதிப்பெண்ணில் அதிகம், குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிளஸ் 2, பட்டப்படிப்பிற்கு சலுகை வழங்குவதால் டி.இ.டில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது. இட ஒதுக்கீடு பின்பற்றபடுகிறதா என தெரிவதில்லை.நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை.

    அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்'

    இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்

    நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கில் அஜ்மல்கான் ஆஜரானார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி 'பணிநியமனம் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பைப் பொறுத்து அமையும்' என்றார்.

    ReplyDelete
  4. ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதல் தேர்ச்சி:
    இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி
    -- தின மணி நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு புதன்கிழமை (மார்ச் 12) தொடங்குகிறது.

    சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர்.

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது.

    இந்த நிலையில், பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மண்டல மையங்கள்: ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்:

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை - எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில், மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி - ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி, திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648.

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி - சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7. தொலைபேசி எண்: 0427-2412160.

    திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் - ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில், கும்பகோணம். தொலைபேசி எண்: 0435-2431566.

    சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, சென்னை - 44. தொலைபேசி எண்: 044-22417714.

    ReplyDelete
  5. yosiyungal friends,10 th la 400 mark eduthavargal 12th la 1st group eduthu 700 mark eduthullanar, but 10th la 200 mark eduthullavargal practical mark athigam ulla group 12th la eduthu 900 mark vangi vaithullanar ,ithil weightage yaruku atigam varum ?ithu nayama? weitage paper 2 ku 10th kum koduka vendum or weightage cancel seiya vendum.. namakul PIRIVINAI ETHARKU?82-89, 90 ABOVE?aanai varum onru paduvom..tet pass seitha nam aanaivarkum padi padi yaga muthalil posting poda vedum b.ed muditha year vaithu..athu varai tet exam vaika kudathu..

    ReplyDelete
  6. அன்பரசு மத்திய அரசு பள்ளி ஆசிரியர் நியமனம் முறை . டி.இ.டி. போட்டி தேர்வு மொழி அறிவு தான். தமிழ் நாட்டில் தான் இந்த வெயிடேஜ் (நான்சென்ஸ், சீட்டிங்..........) மெத்தெட்.

    ReplyDelete
    Replies
    1. hai friend pg trb case yesterday finising yarugavathu full detail therinja sollunga pls

      Delete
    2. praba sir tamila typing pantrathu epadinu konjam solluka mpls

      Delete
  7. Sir யாராவது PG தமிழ் case பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி