பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு 'ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, தேர்வுத் துறை ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2014

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு 'ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, தேர்வுத் துறை ஏற்பாடு.


பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, நேற்று முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய, தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 26 ல் துவங்குகிறது.
தேர்வு எழுதுவதற்காக, 'ஆன்-லைனில்' விண்ணப்பித்திருந்த, தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட் பிரின்ட் அவுட்' பகுதியில் சென்று, விண்ணப்பஎண், பிறந்த தேதியை பதிவு செய்தால், 'ஹால் டிக்கெட்' திரையில் தோன்றும்; அதை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேற்று மாலை முதல் பதிவிறக்கம் செய்ய, தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அறிவியல் பாடத் தேர்வர்களுக்கு, மார்ச் 18 முதல் 22க்குள் செய்முறை தேர்வு நடக்கும். செய்முறை தேர்வு குறித்து, மார்ச் 17பிற்பகலில், தலைமை ஆசிரியரிடம் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி