15,000 பள்ளிகளில் திறந்தவெளியில் சமையல்: பணியாளர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2014

15,000 பள்ளிகளில் திறந்தவெளியில் சமையல்: பணியாளர்கள் அதிருப்தி


தமிழகத்தில் 15 ஆயிரம்பள்ளிகளில், முற்றிலும், சத்துணவுகூடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் மாணவர்களுக்கான மதிய உணவை தயாரிக்கும் அவலநிலையில் பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 1982-83ம் ஆண்டில் தமிழகத்தில் பள்ளி மதிய உணவு திட்டத்தை மேம்படுத்தி, சத்துணவு திட்டம் துவங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் , தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 61 லட்சம் மாணவர்கள் பயனாளிகளாக உள்ளனர்.தமிழகத்தில் 43 ஆயிரத்து 787 பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என்ற பிரிவுகளில் 1.60 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 32 ஆண்டுகளாக, சத்துணவு மையங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளன.மேலும், 15 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு கூடங்கள் இல்லாமல், மாணவர்களுக்கான மதிய உணவு திறந்தவெளியில் சமைக்கப்படுகிறது.

இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் விஜயபாண்டியன் கூறியதாவது:சத்துணவு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், பதவிஉயர்வு, ஓய்வூதியம், சம்பள உயர்வு எதுவும் கிடையாது. தேர்தல் அறிவிப்பில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 30 ஆயிரம் பணியாளர்கள் இடம் காலியாக உள்ளது.குறிப்பாக, 15 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு கூடங்கள் இல்லாமல், திறந்தவெளியில் சமையல் செய்யும் அவலநிலையில் தான் உள்ளது. 43 ஆயிரத்து 787 மையங்களில் வெறும் ஐந்து சதவீத மையங்களுக்கே எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சத்துணவு மையங்களில் அமைப்பாளர்களுக்கு என்று நாற்காலி, மேஜை, பதிவேடுகளை பராமரிக்க பீரோ போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தருவதற்கு அரசு முன்வரவில்லை. இதனால், சத்துணவு பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி