ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2014

ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு.


மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப்பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடந்து வருகிறது. வரும் 26ல்இருந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துவங்குகிறது. இதற்கிடையே இதர வகுப்பு மாணவ, மாணவியருக்கான, பொதுத்தேர்வும் நடக்கிறது.பள்ளிக் கல்வித்துறை கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 22 உடன், அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் முடிந்து விடுகிறது.

எனவே, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் இறுதி வரை வேலை நாள். இதனால்8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இந்த மாத இறுதியில் துவங்கி, ஏப்., இறுதி வரை பொதுத்தேர்வு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ஏப்., 23, 24 தேதிகளிலும் தேர்வு அட்டவணை உள்ளது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தான் அமைக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஏப்., 23, 24ல் நடக்க உள்ள தேர்வுகளை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை, முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, ஓரிரு நாளில், அனைத்து பள்ளிகளுக்கும், இயக்குனரகம் தெரிவிக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி