பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2014

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு.


பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால்ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இயற்பியல் பாடத்துடன் திங்கள்கிழமை தொடங்கின. முதல் பாடமான இயற்பியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால்பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்தனர்.தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் கூறியது: இயற்பியல் பாடத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்த கேள்விகளே அதிகளவில் இடம் பெற்றிருந்தன.

இந்த ஆண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.அதேபோல், பொருளாதாரப் பாட வினாத்தாளும் மிகவும் எளிமையாக இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி