வாக்குப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கிறது: காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரையிலும் நடைபெறவுள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

வாக்குப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கிறது: காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரையிலும் நடைபெறவுள்ளது


நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை 2 மணிநேரம் அதிகரிக்க தேர்தல் ஆணை யம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது. தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில், மார்ச் 25ம் தேதி வரை வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர் களைக் கவரும் வகையில் இலவசப் பொருட்கள் வழங்குவதைக்கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து கண்காணித்து வருகிறது. தேர்தலைசுமூகமாக நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் மற் றும் அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.இதனிடையே, தேர்தல் நடைபெறும் போது வெயி லின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால், வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. பொதுவாக வாக்குப்பதிவு முடியும் நேரங்களில் வரிசையில் நிற் கும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப் படும். அதன்பிறகு வருபவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் பலர் வாக்க ளிக்க முடியாத நிலையும் ஏற்படுவதாக தெரிவிக்கப் பட்டது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய ஆணையம், வாக்குப்பதிவு மையத்தை 2 மணிநேரம் நீட்டிக்க முடி வெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரையிலும், மாவோயிஸ்டுகள் ஆதிக் கம் நிறைந்த பகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 4 மணிவரை நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தேர்தல் ஆணை யம் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி