ஓ.பி.சி.,யினருக்கு 50% மதிப்பெண் போதும்: யு.ஜி.சி., முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2014

ஓ.பி.சி.,யினருக்கு 50% மதிப்பெண் போதும்: யு.ஜி.சி., முடிவு.


கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான, "நெட்" தேர்வில் பங்கேற்க, ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) முடிவெடுத்துள்ளது.

அடுத்த தேர்வுகளில் இந்த மதிப்பெண் குறைப்பு அமலாகலாம் என கூறப்படுகிறது.முதுகலை பட்டம் - எம்.பில்., முடித்தவர்கள், கல்லூரி பேராசிரியர் பணியில் சேர,யு.ஜி.சி.,யின், "நெட்" தேர்வில் வெற்றி பெறவேண்டும்.

இத்தேர்வில் பங்கேற்க முதுகலை பட்டப்படிப்பில், ஓ,பி.சி., பிரிவினர் 55 சதவீதமும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும், "நெட்" தேர்வில் இந்த மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். இந்நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை, 5 சதவீதம் குறைக்க யு.ஜி.சி., முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த யு.ஜி.சி., கூட்டத்தில், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் நடக்கும், "நெட்" தேர்வில், இந்த தகுதி மதிப்பெண் குறைப்பு அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது. மதிப்பெண் குறைப்பு மூலம் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இணையாக ஓ.பி.சி., பிரிவினர் தேர்வில் அதிகளவில் பங்கேற்பர் என தெரிகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி