வாக்காளர்கள் காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டளிக்கலாம்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

வாக்காளர்கள் காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டளிக்கலாம்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு


ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிப்பு குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:தேர்தலின்போது, வெயில் கடுமையாக இருக்கும் என, கருதப்படுவதாலும்,
மற்ற காரணங்களாலும், ஓட்டுப்பதிவு நேரம், வழக்கமான நேரத்தை விட, இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். எனினும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல் ஆதிக்கம் உள்ள தொகுதிகளில், ஓட்டுப்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இதுவரை, வாக்காளர்கள், காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி